Local

ஜனாதிபதி என்னை மிரட்டுகிறார் விஜயதாச தெரிவிப்பு!

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை. இரகசியமாகவே அது கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டமூலத்தால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை நேற்று அம்பலப்படுத்தினேன்.  துறைமுக நகர் சீனாவின் கொலணியாகும் நிலையை தடுக்க வேண்டும் எனவும் கூறினேன்.

இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார். கடும் சினத்துடன், மிகவும் கீழ்த்தரமாக என்னை விமர்சித்தார். அரச தலைவர் ஒருவருக்கு பொருத்தமற்ற விதத்தில் அவர் செயற்பட்டாலும். ஜனாதிபதி கையாண்ட பாஷையிலேயே நானும் பதில் கொடுத்தேன். ஜனாதிபதி இவ்வாறு அச்சுறுத்துவது பாரதூரம். உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.”

இவ்வாறு ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச இன்று தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading