Local

ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய விஷேட உரை!

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை பெற்று இலங்கை மக்களின் நம்பிக்கையை பெறக்கூடிய புதிய பிரதமரும் அரசாங்கமும் இந்த வாரத்தில் நியமிக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்காக கடந்த சில நாட்களில் பல தீர்மானங்களை எடுத்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குமாறு பலரும் தனக்கு கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் கூறியுள்ளார். அந்தப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் 19வது திருத்தச் சட்டத்தின் உள்ளடக்கங்களை மீண்டும் அமுல்படுத்தும் வகையில், நாடாளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading