Local

ஜனாதிபதி மாளிகையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் அட்டகாசம் படிகளுக்கு பல கோடி ரூபா செலவு!

ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்களால் சேதமாக்கப்பட்ட மேல் தளத்திற்கு செல்லும் படிகளை புனரமைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

அதற்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் செலவாகும் என தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது, ​​மேல் மாடிக்கு செல்லும் தொல்லியல் மதிப்புள்ள படிக்கட்டு சேதமடைந்துள்ளது.

அதனை புதிதாக சீரமைக்க வேண்டும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்குள் போராட்டகாரர்கள் என்ற போர்வை திட்டமிட்ட சிலர் நுழைந்து, அங்கிருந்த பொருட்களை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

போராட்டம் என்ற போர்வையில் அரசுக்கு சொந்தமான இடங்களை முற்றுகையிட்டு தங்கியிருந்த நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading