Local

ஜனாதிபதி ரணிலால் வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் புதிய வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதி உயர்பாதுகாப்பு வலயம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை இரத்துச்செய்து இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

மேல்மாகாணத்தில் ஒரு சில பகுதிகளை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானியை இரத்துச் செய்தே ஜனாதிபதியினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து வெளியான அதிவிசேட வர்த்தமானி இரத்தச் செய்யபப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விகர்மசிங்கவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பின் சில முக்கிய பிரதேசங்களை அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அறிவித்து செப்டெம்பர் 23 ஆம் திகதி பாதுகாப்பு அமைச்சினால் வர்த்தமானி வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading