Local

ஜனாதிபதி ரணில் உள்ளிட்ட அரச தலைவர்களை வரவேற்ற ஐ.நா பொதுச்செயலாளர்

நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரச தலைவர்களை ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் வரவேற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் (UNGA) 78ஆவது அமர்வின் பொது விவாதம் இன்று மாலை ஆரம்பமானது.

இந்த ஆண்டு பொதுக் கூட்டத்தில் குறைந்தபட்சம் 145 நாடுகளைச் சேர்ந்த அரச தலைவர்கள் மேடையேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரேசில் ஜனாதிபதி லூயிஸ் இனாசியோ, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் இன்றைய தினம் பொது சபை கூட்டத்தில் உரையாற்ற உள்ளனர்.

ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ், சீனா மற்றும் ரஷ்யாவின் தலைவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள். இந்தியா மற்றும் மெக்சிகோ போன்ற முக்கிய நாடுகளின் தலைவர்களுக்கு பதிலாக அந்நாட்டு அமைச்சர்களும் உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை எதிர்வரும் 21ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொது சபையில் உரையாற்றவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading