Local

ஜனாதிபதி ரணில் புலம்பெயர் அமைப்புகள் மீதான தடைகளை நீக்கினார்!

இலங்கை அரசாங்கம், சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர் அமைப்புக்கள் மீதான தடையை அதிரடியாக நீக்கியுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பலரும் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.

அதற்கமைய உலகத் தமிழர் பேரவை மற்றும் அதன் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் மீதான தடைகளை இலங்கை அரசு நீக்கியுள்ளது.

பிரிட்டன் தமிழர் பேரவை, கனடா தமிழ்க் காங்கிரஸ் ஆகிய அமைப்புக்கள் மீதான தடையையும் இலங்கை அரசு நீக்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading