ஜனாஸாக்கள் எரிக்க நினைப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்!

கொரோனா நோயால் இறந்தவர்கள் உலகம் முழுவதும் அவர்களின் மத நம்பிக்கை அடிப்படையில் அடக்கம் செய்தும், எரித்தும் வருகின்றனர்.
இந்த இரண்டு நிலைகளுக்கும் உலக சுகாதார மையம் தெளிவான வழிகாட்டுதலும் கொடுத்துள்ளது.
இலங்கை அரசு கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களை எரிக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர முயற்சிக்கிறது. இது கடுமையான கண்டனத்திற்குரியது.
உலகில் வாழும் பெரும்பான்மை மக்களாக உள்ள இஸ்லாமியர்களும், கிறித்தவர்களும் தங்கள் வழிபாட்டு அடிப்படையில் இறந்த சடலங்களை மண்ணில் புதைத்து அடக்கம் செய்யக் கூடியவர்கள். இதனால் நோய் பரவும் எந்த வாய்ப்பும் இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் அனுமதி அளித்துள்ள நிலையும் உள்ளது.
ஆனால் இலங்கையில் சிறுபான்மையாக அவர்கள் உள்ளதால் தன்னுடைய இனவாதத்தை முன் வைக்க இலங்கை அரசு துடிக்கிறது.
சர்வதேச விதிகளுக்கு புறம்பாக இலங்கை இனவாத அரசு இத்தகைய நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக குற்ற சாட்டுக்கள் வருகிறது.
மக்கள் அதிக பாதிப்பில் உள்ள இந்த நேரத்திலும் தன் இனவாத சிந்தனையை திணிப்பதை இலங்கை அரசு நிறுத்த வேண்டும்.
கொரோனா தொற்றில் பாதிப்பு ஏற்பட்டவர்களும் இதனால் மருத்துவ மனை வர அஞ்சும் நிலை ஏற்படும்.
இது மிகப்பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து இறந்த சடலங்களை அடக்கம் செய்ய உலக சுகாதார நிறுவனம் தந்த வழிகாட்டுதல் அடிப்படையில் அடக்கம் செய்ய இலங்கை அரசு வழிவகை செய்ய வேண்டும்
என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
இப்படிக்கு,
இ.முஹம்மது,
மாநில பொதுச் செயலாளர்,
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத். ?
