Local

ஜப்பானில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்புகள்!


ஜப்பானிய அரசாங்கம் இலங்கை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்க உடன்பட்டுள்ளது.

ஜப்பானில் விவசாயப் பண்ணைகளில் ஆயிரம் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க ஜப்பானிய அரசு ஒப்புக்கொண்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அடுத்த இரு வாரங்களுக்குள் இது தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் குணசேகர தெரிவித்தார். இன்று காலை விவசாய அமைச்சுடன் ஸூம் கலந்துரையாடலில் பேசும் போது அவர் இதைத் தெரிவித்தார்.

ஜப்பானில் இலங்கை இளைஞர்கள் 1000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தலையிட்டமைக்காக ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவருக்கு விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நன்றி தெரிவித்துள்ளார்.

இந்த வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்துடன் இணைந்து தேவையான மொழிப் பயிற்சி மற்றும் பிற தொடர்புடைய பயிற்சித் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading