World

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் டோக்கியோவின் வடகிழக்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

குறித்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 7.1ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, கிழக்கு ஜப்பானில் 7.3 ரிச்டர் அளவில் மற்றுமொரு சக்திவாய்ந்த நிலநடுக்கமும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் சுமார் 2 மில்லியன் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அடுத்தடுத்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஜப்பானில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading