ஜமால் கஷோகி கொலையில் கசிந்த திடுக்கிடும் தகவல்கள்!

ஜமால் கஷோகியை கொலை செய்தவர்கள் கொலை செய்வதற்கு முன்பு எகிப்திற்கு சென்று சட்டவிரோத மருந்துகளை வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியைக் கொன்ற சவுதியை சேர்ந்த கொலையாளிகள் எகிப்துக்குப் பறந்து சட்டவிரோத மருந்துகளை வாங்கியுள்ளனர். பின்னர் அம்மருந்துகளை கொலை செய்யப் பயன்படுத்தினர் என்று யாகூ செய்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கோளிடப்பட்டுள்ளது.
2 ஒக்டோபர் 2018 அன்று, கொலையாளிகளை ஏற்றிச் சென்ற விமானம் எகிப்தின் கெய்ரோ சென்று இறுதியில் துருக்கி இஸ்தான்புல்லில் தரையிறங்கியுள்ளது.
இருப்பினும் என்ன வகையான மருந்துகள் அவற்றை வழங்கியவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஜமால் கஷோகி துருக்கி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்திற்குள் நுழைந்த பின்னர் அவருக்கு பலவந்தமாக அந்த மருந்துகள் திணிக்கப்பட்டதை தொடர்ந்து கஷோகி அங்கிருந்து ஓட முயற்சித்துள்ளார்.
பின்னர் அவரை சவுதி தூதரக ஜெனரலின் அலுவலகத்திற்குள் ஒரு நாற்காலியில் கட்டி சவுதி உள்துறை அமைச்சகத்தின் தடயவியல் மருத்துவர் சலா துபாய்கி, கஷோகியை தனது இடது கையாள் ஒரு மருந்தை உட்செலுத்தியுள்ளார்.
புதிய விபரங்களின் படி சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலையில் எகிப்து ஈடுபட்டிருப்பதற்கான அறிகுறியை சுட்டிக்காட்டுகிறது.
