Local

ஜம்மியத்துல் உலமா சபையின் கலந்துரையாடல் பதிவை ஞானசார தேரர் வெளியிட்டுள்ளார்!

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கலந்துரை யாடல் பதிவை  பொதுபல சேனா அமைப்பின் செய­லாளர் கல­ ஞான­சார தேரர் வெளியிட்டுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் அடங்கிய  பதிவை தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றில் பொதுபல சேனா அமைப்பின் செய­லாளர் கல­கொட அத்தே ஞான­சார தேரர் வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளி தொடர்பாக தகவல் விடுத்தோரை கடவுள் பார்த்துக் கொள்வார் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 7ஆம் திகதி அன்று ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக உலமா சபையில் இடம்பெற்ற கலந்துரையாடல் பதிவு செய்யப்பட்ட காணொளிக் காட்சிகள் உலமா சபையின் சிரேஷ்ட உறுப்பினர் மூலம் ஞானசார தேரருக்கு வழங்கப்பட் டமை பொதுபல சேனா அமைப்புக்கு நெருக்கமான வட்டாரங்களால் தெரியவந்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் 07 ஆம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடல்  உட்படப் பல சர்ச்சைக்குரிய கூட்டங்களின் ஒலிப்பதிவு மற்றும் காணொளிப் பதிவு கள் ஞான­சார தேரருக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading