World

ஜெயலலிதா மர்ம மரணம் 6 வாரங்களில் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு!

ஜெயலலிதா மரணம் குறித்து 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கருதிய தமிழக அரசு, அவரது மரணம் குறித்து விசாரணை நடத்த கடந்த 2017ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தை அமைத்தது. ஆணையம் அமைக்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை ஆறுமுகசாமி ஆணையம் இடைக்கால அறிக்கையோ அல்லது இறுதி அறிக்கையை  ஏன் அறிக்கை அளிக்கவில்லை என்ற கேள்வி மேலெழும்பி உள்ளது.
அதிமுக ஆட்சி இருந்த ஜெயலலிதா மரணம் பற்றி எந்த ஒரு விசாரணையும் நடத்தப்படவில்லை.திமுக ஆட்சியிலாவது ஜெயலலிதா மரணம் குறித்த மர்மம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை முடிக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 3 மாதத்தில் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என ஆறுமுகசாமி ஆணையத்திற்கு ஏன் உத்தரவிடக் கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து தமிழக அரசு 6 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading