Cinema

ஜோதிகா – மம்முட்டி படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு

நடிகை ஜோதிகா நாயகியாக நடித்திருக்கும் “காதல் – தி கோர்” திரைப்படம் நவம்பர் 23ம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இதனை படக்குழுவினர் புதிய போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

மம்முட்டியை கட்டியணைத்தபடி, ஜோதிகா இருக்கும் இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும், மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ‘தி கிரேட் இந்தியன் கிட்சன்’ படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்கியுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading