Local

ஞானசார தேரரின் சர்ச்சை கருத்து தொடர்பில் முறைப்பாடு!

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஐக்கிய மக்கள் சத்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களை நிசார் மவுலானா ஆகியோர் முறைப்பாடுகளை செய்துள்ளனர்.

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் பிரதான சூத்திரதாரி அல்லாஹ் என ஞானசார தேரர் கருத்து வெளியிட்டுள்ளார். அத்துடன் ஞாயிறு தாக்குதல் போன்ற மற்றுமொரு தாக்குதல் நடைபெற வாய்ப்பு உள்ளதாகவும் அது தொடர்பான தகவல் தன்னிடம் இருப்பதாகவும் ஞானசார தேரர் கூறியுள்ளார்.

இந்நிலையில் இனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட மற்றும் தாக்குதல் தொடர்பில் தகவல் அறிந்து அதனை பாதுகாப்புத் தரப்பினரிடம் வழங்காமல் மறைத்து வைத்துள்ளமை போன்ற குற்றச் சாட்டுக்கள் குறித்து விசாரணை செய்யுமாறு பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading