World

டிரம்பின் எச்சரிக்கைக்கு ஈரான் பதிலடி…

ஈரானின் உள்கட்டமைப்புகளை தாக்கினால் பிராந்தியம் முழுவதும் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்காவை ஈரான் எச்சரித்துள்ளது.

மத்திய கிழக்கில் பதற்றம் மீண்டும் உச்சம் தொட்டுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரானின் உள்கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல் நடத்த போவதாக பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், டிரம்பின் இந்த கருத்துக்கு வியாழக்கிழமை ஈரானின் கதம் அல் அம்பியா மத்திய தலைமையகத்தின் செய்தி தொடர்பாளர் இப்ராஹிம் சோல்பகாரி கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான் | Iran Warns Us Over Infrastructure Threats

அதில், “அமெரிக்கா ஈரான் உள்கட்டமைப்புகளை தாக்கினால், பிராந்தியத்தில் அமெரிக்காவுக்கு சொந்தமான அனைத்து உள்கட்டமைப்புகளையும் குறிவைத்து ஈரானின் ஆயுத படைகள் தாக்குதல் நடத்தும் என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.

மேலும் அமெரிக்க நிலைகள் இருந்ததற்கான சுவடு கூட இருக்காது என்றும் ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் விவகாரம்

அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஈரான் | Iran Warns Us Over Infrastructure Threats

உள்கட்டமைப்பு அச்சுறுத்தல்களை தாண்டி ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்காவின் தலையீட்டை  எந்தவொரு சூழ்நிலையிலும் ஈரான் அனுமதிக்காது என்று திட்டவட்டமாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

எச்சரிக்கையை மீறி அமெரிக்கா அத்துமீறினால், இதுவரை பார்த்திராத மிக மோசமான விளைவுகளை அமெரிக்கா சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading