World

டுவிட்டர் லோகோவில் இடம்பெற்ற நாய் படம்!

டுவிட்டர் லோகோவில் நாய் பதிவிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது

உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்  மஸ்க்டுவிட்டரை பணம் கொடுத்து வாங்கி தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றார்

. அதில் இருந்து டுவிட்டரில் அவர் அவ்வப்போது பல மாற்றங்களை கொண்டு வருகிறார்.

அந்த வகையில், தற்போது எலான் மஸ்க் டிவிட்டர் செயலியின் லோகோவை திடீரென மாற்றியுள்ளார். 

டுவிட்டர் செயலி அறிமுகமான காலகட்டத்தில் இருந்து லோவாக இருந்த நீல பறவை மாற்றப்பட்டு  ஹோம் பேஜில் பறவை லோகோவுக்கு பதில் ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் முகத்தை  லோகோவாக மாற்றியுள்ளார்.

பலரும் மீம்ஸ்களுக்கு உபோயோகிக்கும் ஷிபா இனு  (சீம்ஸ்) முகத்தை வேடிக்கையான வகையில் டுவிட்டர் லோகோவை எலான் மஸ்க் மாற்றியுள்ளதால் இது குறித்து பயனர்கள் பலரும் எலான் மஸ்க்கை டேக் செய்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading