Local

டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கலாம்!

டெல்டா வைரஸ் நாட்டின் ஏனைய பகுதிகளிற்கு ஏற்கனவே பரவியிருக்கலாம் என பிரதிசுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதனை உறுதிசெய்யும் வகையில் இதுவரை நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஆபத்தான வைரஸ் பரவியுள்ளதா என்பதை உறுதி செய்வதற்கா சுகாதார அமைச்சு ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதார பரிசோதனைகளைமேற்கொண்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் இதனை சாதாரணமாக எடுக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் ஜெயவர்த்தனபுர பல்கலைகழகம் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது அதன் முடிவுகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைவடையும் போக்கு தென்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading