Local

டெல்டா வைரஸ் 135 நாடுகளுக்கு பரவியது!

இந்தியாவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட, மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகைக் கொரோனா 135 நாடுகளில் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி, ஆல்ஃபா வகை கொரோனா உலகின் 132 நாடுகளிலும் பீட்டா வகை கொரோனா 81 நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆல்ஃபா வகை கொரோனா 182 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. மிகவும் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட டெல்டா வகை கொரோனா இதுவரை 135 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் புதிதாக கொரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

ஜூலை 26 முதல் ஆக. 1 ஆம் திகதி வரை மட்டும் 40 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கிழக்கு மத்தியதரை, மேற்கு பசிபிக் பிராந்திய நாடுகளில் தினசரி கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சா்வதேச அளவில் அந்த எண்ணிக்கை உயா்ந்து வருகிறது. புதிய கொரோனா தொற்று கிழக்கு மத்தியதரைப் பிராந்தியத்திலும் 37 சதவீமும் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 33 சதவீதமும் அதிகரித்துள்ளது.

தென்-கிழக்கு ஆசியப் பகுதிகளில் புதிய கொரோனா தொற்று 9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading