Local

டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிப்பு!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஜோர்ஜியா தேர்தல் முறைகேடு சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி கைது செய்யப்பட்டு ஃபுல்டன் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சுமார் 20 நிமிடங்கள் சிறையில் இருந்துள்ளார்.

சக குற்றவாளிகளையோ சாட்சிகளையோ மிரட்டுவதற்கு சமூக ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட பிற நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்ட பின்னரே அவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

சிறையில் இருந்து விடுதலையான பிறகு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், தான் எந்த தவறும் செய்யவில்லை என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading