Local

தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!

கொழும்பு – செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்று (29) ஆபரண தங்கத்தின் விலை மேலும் குறைவடைந்துள்ளது.
செட்டியார்தெரு தகவல்களின் படி தங்கத்தின் விலையில் கடந்த சில கிழமைகளாக தங்கத்தின் விலையில் வீழ்ச்சி பதிவாகி வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலையானது 149,000 ரூபா என்ற நிலையிலேயே காணப்பட்டது.
இவ்வாறான சூழலில் இன்று மீண்டும் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்றைய தினம் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலையானது 148,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
24 கரட் தங்கப் பவுணொன்றின் விலையானது 160,000 ரூபாவாக காணப்படுகிறது.
ஏற்கனவே தங்க விலையானது 146,000 ரூபா வரையில் குறைந்த போது இன்னும் விலை குறைவை எதிர்நோக்கி காத்திருந்தவர்களுக்கு திடீர் விலை அதிகரிப்பானது ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இவ்வாறான சூழலில் மீண்டும் தங்க விலையில் வீழ்ச்சி பதிவாகி வரும் நிலைமையானது நகை வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவலான அமையும் எனவும் பொருளாதார அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading