World

தங்க முலாம் பூசிய இறைச்சி விற்பனைக்கு!

வியட்நாமில் உள்ள இறைச்சிக் கடை ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை விற்பனை செய்வது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

வியட்நாம் நாட்டில் உள்ள ஹெனாய் என்ற நகரில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஒரு புதிய இறைச்சி உணவகம் திறக்கப்பட்டது. இதில் தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சியை அடுப்பில் வேக வைத்து சமைத்து வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர்.

தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சியை வேக வைக்கும்போதும், பொரிக்கும் போதும், வாடிக்கையாளர்கள் பார்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இதன் விலை இந்திய மதிப்பில் 3300 ரூபாய் என்றும் இதன் சுவை மிகவும் நன்றாக இருப்பதாகவும் நீண்ட தங்கமுலாம் பூசப்பட்ட இறைச்சியை சாப்பிட்டவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading