Local

தடுப்பூசினால் மேலும் ஒரு நோயாளி மரணம்?

 

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளர் ஒருவர், நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட ஒவ்வாமையால் உயிரிழந்துள்ளார்.

குறித்த நோயாளர் வெட்டுக் காயங்களுடன் வரக்காபொல ஆதார வைத்தியசாலையில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று முன்தினம் மாற்றப்பட்டார்.

ஒவ்வாமை காரணமாக அவர் உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) பரிசீலனை நடத்தப்படும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.

இந்த நிலையில், தற்போது குறித்த தடுப்பூசி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பயன்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் உயிரிழந்த நோயாளரின் பிரேத பரிசோதனையின் பின்னர் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading