Local

தடுப்பூசியை போட்டுக் கொண்ட மருத்துவர் உடல் நிலை மோசமாகி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மெக்சிகோவில் ஃபைசரின் தடுப்பூசி
போட்டுக் கொண்ட
பெண் மருத்துவர் ஒருவர் உடல் நிலை
மோசமாகி அவசர சிகிச்சைப் பிரிவில்
சேர்க்கப்பட்டுள்ளார்.

மெக்சிகோவின் வடக்கு மாநிலம்
நியூவோ லியோன் இந்த சம்பவம்
நடந்துள்ளது. தடுப்பூசி போட்ட பின் 32
வயதான அந்த பெண் மருத்துவருக்கு
Encephalomyelitis எனப்படும் மூளை, முதுகுத்
தண்டு பாதிப்பு ஏற்பட்டதாக மெக்சிகோ
சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வலிப்பு, மூச்சுத் திணறல், தோல் அரிப்பு
போன்ற பிரச்சனைகளும் அவருக்கு
ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள்
தெரிவித்தனர். ஆனால் குறிப்பிட்ட பெண்
மருத்துவருக்கு ஒவ்வாமை கோளாறுகள்
இருந்ததாகவும், அதன் காரணமாகவே இந்த
பின்விளைவுகள் ஏற்பட்டதாகவும்
மெக்சிகோ அரசு விளக்கம் அளித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading