Local

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் இருப்பவர்களுக்கு அரசாங்கம் காலக்கெடு!

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்திற்குள் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளவேண்டும் என அரசாங்கம் காலக்கெடு விதித்துள்ளது.
இளைஞர்களிற்கு தடுப்பூசிவழங்குவதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என்பதால் தடுப்பூசி வழங்கும் நிலையங்கள் தொடர்ந்தும் செயற்படமுடியாது என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சன்னஜெயசுமன இதன் காரணமாகவே அரசாங்கம் காலக்கெடு விதிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

30வயதிற்கு மேற்பட்ட பெருமளவானவர்கள் தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர் என தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் அதேவேளை பல காரணங்களிற்காக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத பலர் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

எங்களால் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களை ஒவ்வொரு நாளும் திறந்துவைத்திருக்கமுடியாது என குறிப்பிட்டுள்ள அவர் இதன் காரணமாக தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 30 வயதிற்கு மேற்பட்டவர்களை  ஒரு வாரகாலத்திற்குள்  தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்துள்ளார்.
30வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு தடுப்பூசி வழங்குவதை கடந்தவாரமே பூர்த்தி செய்ய தீர்மானித்திருந்தோம் எனினும் ஒருவாரம் நீடித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading