World

தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால் சம்பளம் கிடையாது அதிரடி அறிவிப்பு!

பாகிஸ்தானில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால்,  அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் முதல் சம்பளம் வழங்கப்படாது, அலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும் என அரசாங்கம் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, ஒரே நாளில் ஒரு மில்லியன் மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

பாகிஸ்தானில் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம்காட்டாமல் உள்ளதை அடுத்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளாவிட்டால், அலைபேசி இணைப்பு துண்டிக்கப்படும், அலுவலகம் செல்ல அனுமதி மறுக்கப்படும்; சம்பளம் வழங்கப்படாது; உணவகங்கள், வணிக வளாகங்களில் நுழையத் தடை விதிக்கப்படும்’ என, பாகிஸ்தான் அரசு அதிரடியான அறிவிப்புகளை வெளியிட்டது.

இதையடுத்து பாகிஸ்தான் மக்கள் தற்போது தடுப்பூசி மையங்களில் கிலோ மீட்டர் கணக்கான தூரத்துக்கு அணிவகுத்துக் காத்து நின்று, தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading