Local

தடுப்பூசி செலுத்தி நிறைவடையும் வரை முடக்கம்?

தடுப்பூசி செலுத்தி நிறைவடையும் வரை, நாடு முடக்கப்படும் என கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.

அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார்.

அச்சுறுத்தலான பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி எதிர்வரும் ஓரிரு தினங்களில் நிறைவு செய்ய முடியும் எனவும் அவர் கூறுகின்றார்.

30 வயதுக்கு மேற்பட்ட சுமார் 96 வீதமானோர் தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், ஊசிக்கு அச்சம் கொண்ட சிலர் இதுவரை தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

எந்தவித அச்சமும் இன்றி, அவ்வாறான தரப்பினரும் விரைவில் தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளுமாறு அவர் கோரிக்கை விடுக்கின்றார்.

அத்துடன், தற்போது 20 முதல் 30 வயதுக்கு இடைப்பட்ட தரப்பிற்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், 12 வயதுக்கு மேற்பட்ட தரப்பிற்கு விரைவில் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.

மேலும், 12 வயதுக்கு குறைவானோருக்கு தடுப்பூசி செலுத்த சில நாடுகள் ஆரம்பித்துள்ளதாக தெரிவித்த அவர், இலங்கையிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டார்.

அதனால், தடுப்பூசி செலுத்தி நிறைவு செய்யும் சரியான திகதியை தற்போதைக்கு அறிவிக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading