World

தடுப்பூசி போடாதவர்களுக்கு வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை!

அமெரிக்காவில் கோவிட் தடுப்பூசி போடாதவர்களை வீடு வீடாகத் தேடிச்சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க  அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

இந்த வார இறுதிக்குள் 16 கோடி அமெரிக்க மக்களுக்கு தடுப்பூசி போடும் இலக்கு எட்டப்படும் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

தாம் பதவிக்கு வந்த போது இந்த எண்ணிக்கை 30 லட்சமாக இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். இன்னும் பல லட்சம் அமெரிக்கர்கள் தடுப்பூசி போடாமல் கோவிட் டெல்டா பிளஸ் பாதிப்புக்கு ஆளாகக் கூடிய ஆபத்தில் இருப்பதால் வீடு வீடாகச் சென்று தடுப்பூசி போடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading