World

தடுப்பூசி போடுவதை தடுக்க தினமும் மதுபானம் குடிக்கும் கிராம மக்கள்!

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க தடுப்பூசியே ஒரே வழி என்றுள்ளது. இதனால் மக்கள் பலர் கொரோனா தடுப்பூசி போட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி பற்றிய பயமும் பலர் மத்தியில் நிலவி வருகிறது.

அந்தவகையில் கர்நாடக மாநிலம், யாதகிரி மாவட்டத்தின் ஒனகெரே கிராமத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பயந்து ஆண்கள் மட்டுமல்லாது பெண்கள் பலரும் மதுகுடிப்பதாக கூறப்படுகிறது.

மதுபானம் குடித்தால் கொரோனா தடுப்பூசி போடமாட்டார்கள் என்பதால் அவர்கள் தினமும் காலையிலேயே மதுபானம் குடிக்க தொடங்கி விடுகிறார்களாம்.

இதனால் கடந்த ஒரு வாரமாக தடுப்பூசி போட முடியாமல் சுகாதாரத் துறை ஊழியர்கள் தினமும் அந்த கிராமத்துக்கு சென்று ஏமாற்றதுடம் திரும்பி வருகின்றனர். 

இந்நிலையில் சிகாதாரத் துறை ஊழியர்கள் இந்த பிரச்சனைக்கு தீர்வு கான மாவட்ட சுகாதாரத்துறையினரிடம் முறையிட்டுள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading