World

தண்டவாளத்தில் தூங்கிய 17 தொழிலாளர்கள் பலி!

மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத் அருகே, தண்டவாளத்தில் படுத்து தூங்கிக்கொண்டிருந்த 17 தொழிலாளர்கள் சரக்கு தொடருந்து  மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தொழிலாளர்கள் அனைவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் என்றும், அவர்கள் அவுரங்காபாத் எம்ஐடிசிக்குச் சென்று கொண்டிருந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நீண்ட தூரம் நடைபயணமாக சென்றதால், இரவில் அவர்கள் தொடருந்து  பாதையில் ஓய்வெடுத்துள்ளனர்.
இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன் பின்னர், தொடருந்து அதிகாரிகள் சம்பவ இடத்தை அடைந்துள்ளனர்.
சரக்கு தொடருந்து  கடந்து சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading