World

தந்தையின் தகாத உறவால் மாணவி கர்ப்பம்!

நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார்கோவில் அருகே ஆக்கூரை சேர்ந்த 9ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவு காரணமாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. உடனடியாக மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனைக்கு வந்து பொலிசார் விசாரணை செய்ததில் சிறுமியின் தந்தை மகளிடம் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக்கியது தெரியவந்தது.

உடனடியாக சிறுமியிடம் புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் சிறுமியின் தந்தை மீது போக்சோ சட்டமான குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

சிறுமி தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பெற்ற மகளை தந்தையே கர்ப்பமாக்கிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading