World

தனது மகள் 15 வயதில் குர்ஆனை முழுமையாக வாசித்து முடித்தார்.. பில் கிளிண்டன் தெரிவிப்பு!!

இஸ்லாத்தைப் பின்பற்றுவதனாலேயே முஸ்லிம்களைத் தாழ்வாகப் பார்க்கும் நபர்களின் செயற்பாடுகள் குறித்துத் தனது அதிருப்தியை வெளியிட்ட முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன், பரஸ்பர மரியாதை மற்றும் மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

தனது மகள் செல்சி தனது 15ஆவது வயதிலேயே திருக்குர்ஆனை முழுமையாக வாசித்து முடித்ததாகத் தெரிவித்த அவர், மனிதர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்வதற்காகவே இறைவனால் வித்தியாசமாகப் படைக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அனைத்து மதங்களிலும் தவறான வழிகாட்டுதல்களை வழங்குபவர்கள் இருப்பதாகவும், மனிதர்கள் தங்களது மதத்தைக் கொண்டு அல்லாது அவர்களது நற்செயல்கள் மற்றும் குணநலன்களின் மூலமே மதிப்பிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading