23 வயது மாணவிக்கு மரண தண்டனை…!!!
ஈரானில் சமய நிந்தனைக்காக 23 வயது மாணவி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகத்தில் நபிகள் நாயகம் குறித்து அவதூறாகக் கருத்துத் தெரிவித்ததற்காக நஜ்மா அமினி கடந்த பெப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்குச் செப்டம்பர் மாதத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டதாக மனித உரிமை அமைப்புகள் தெரிவித்தன.
எனினும், இது இறுதித் தீர்ப்பு அல்ல என்றும், இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஈரானில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக 34 ஆண்கள் இதுவரை தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
அமினி உட்பட 9 பெண்கள் அரசியல் மற்றும் பாதுகாப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
சமூக ஊடகக் கருத்துகளுக்காக மரண தண்டனை விதிப்பது மிகவும் கவலைக்குரியது என்று ஈரானிய மனித உரிமைகள் அமைப்பு கவலை வெளியிட்டுள்ளது.

You must be logged in to post a comment.