Local

தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் இருந்த இருவர் இன்று உயிரிழப்பு

கொரோனா தொற்று தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களில் இருவர் இன்று (01) உயிரிழந்துள்ளனர்.

கொழும்பு, குணசிங்கபுரவிலிருந்து முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் சென்று தங்க வைக்கப்பட்டிருந்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்த தகவலை விமானப்படை பேச்சாளர் உறுதிப்படுத்தினார். எனினும், கொரோனா தொற்றால்தான் அவர்கள் உயிரிழந்தனர் என கூறமுடியாது. பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் நாளையே வெளிவரும் எனவும் அவர் கூறினார்.

அத்துடன், உயிரிழந்த இருவரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருக்கக்கூடும் எனவும், தனிமைப்படுத்தல் முகாமுக்கு கொண்டுசெல்லும்போதே ஒருவர் நோய்வாய்ப்பட்டிருந்தார் எனவும் கூறினார். இவர்கள் தொடர்பான உரிய தகவல்களும் இல்லை எனக் கூறப்படுகின்றது.

குணசிங்கபுரம் பகுதியில் யாசகத்தில் ஈடுபட்டிருந்த சிலரும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading