Local

தனிமைப்படுத்தலில் இருந்த நபர் சடலமாக மாறிய சோகம்!

பாணந்துறை பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபரொருவர் வீட்டில் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

இவ்வாறு தனியாக வீட்டில் இருந்துவந்த நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் அவரின் உடல்நிலை தொடர்பில் அவதானிப்பதற்காக குறித்த வீட்டிக்கு சென்றிருந்த போதே இவ்வாறு உயிரிழந்து காணப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் பொதுசுகாதார பரிசோதகர்கள் குறித்த வீட்டின் கதவை உடைத்து உயிரிழந்தவரின் சடலத்தை வெளியே எடுத்துவந்துள்ளதாக அறியமுடிகிறது.

எனினும் சமூக ஊடகங்களில் குறித்த புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு தரப்பினரும் மாறுபட்ட கருத்துக்களை பதிவிடுவதை அவதானிக்க முடிகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading