Local

தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிப்பு!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல்  ஊரடங்கு மேலும் 10 நாட்களுக்கு  நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி எதிர்வரும் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக . ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில்  கொரோனா தடுப்பு தேசிய செயலணியினருடன இன்று  முற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் ராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை நாட்டின் தற்போதைய நிலையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும்  குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் குறித்த காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன்  பொதுமக்கள் அத்தியாவசி நடமாட்டங்களை தவிர்த்து செயற்படுமாறும்  ராணுவத் தளபதி வலியுறுத்தியுள்ளார்

மேலும் குறித்த காலப்பகுதியில் தடுப்பூசி திட்டம் தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும்  . ராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading