Local

தனியார்துறை ஊழியர்களுக்கு வீட்டில் இருந்து வேலை!

இலங்கையில் தனியார் துறை ஊழியர்கள் வீடுகளில் இருந்து வேலை செய்யும் முறைமையை பின்பற்றுமாறு அரசாங்கம் தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பில் அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை தனியார் துறையினரும் பின்பற்றுவதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாதென தொழில் அமைச்சின் செயலாளர்  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், நாட்டில் நிலவும் தற்போதைய நெருக்கடி நிலை வழமைக்கு திரும்பும் வரை அரசாங்கத்திற்கு தேவையான ஒத்துழைப்பினை வழங்குமாறு தனியார் பிரிவினரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். 

இறக்குமதி செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்கு இடையூறுகள் ஏற்படாத வண்ணம் உரிய வேலைத்திட்டங்களை பின்பற்றுமாறு அரசாங்கத்தினால் தனியார் பிரிவினரிடம் கேட்டுக்கொள்ளப்படுவதாக தொழில் அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading