Local

தனுஷ்க குணதிலவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கியுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு மேலும் ஒரு நிவாரணத்தை வழங்க அவுஸ்திரேலிய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இச்சம்பவத்தை தனுஷ்க குணதிலவுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, இந்தச் சலுகையின் மூலம் தனுஷ்க குணதிலக்க அவுஸ்திரேலியாவுக்குச் பயணிக்கவும், அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்க தனுஷ்கவுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் ஒரு மாதத்தில் 2 தடவைகள் அவுஸ்திரேலியாவிற்குள் விமானத்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் அவுஸ்திரேலியாவுக்குள் பயணிக்க விரும்பினால், அவர் பயணிக்கும் காலம், இடம், பாதை என்பனவற்றை குறைந்தது 48 மணித்தியாலங்களுக்கு முன்னரே பொலிஸாருக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading