Cinema

தனுஷ், நித்யாமேனனின் வீடியோ கசிந்ததால் பரபரப்பு!

நடிகர் தனுஷ், நடிகை நித்யாமேனன் இணைந்து நடிக்கும் திருச்சிற்றம்பலம் படத்தின் படப்பிடிப்புத்தள வீடியோ இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘திருச்சிற்றம்பலம்’. இந்தப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ள நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இசையமைப்பாளர் அனிருத் தனுஷ் படத்திற்கு இசையமைக்கிறார்.

மேலும் பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா ஆகிய 3 பேர் ஹீரோயின்களாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கதாநாயகி ராஷி கண்ணா தனுஷுடன் இருக்கும் படப்பிடிப்புத்தள புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி வைரலானது.

அதனை தொடர்ந்து தற்போது தனுஷ் மற்றும் நித்யா மேனன் சம்பந்தப்பட்ட பாடல் காட்சி ஒன்றின் படப்பிடிப்பு வீடியோ ஒன்று லீக்காகி உள்ளது. இது படக்குழுவினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading