Cinema

தனுஷ் மருமகன் இல்லை மூத்த மகன் ரஜினியின் பேச்சால் பரபரப்பு!

நடிகர் தனுஷும்  ஐஸ்வர்யாவும் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.  தற்போது  இவர்கள் இருவரும் தங்களது 18 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் அறிவித்திருந்தனர். முன்னதாக நடிகர் தனுஷ் ஐஸ்வர்யாவை தான் பிரிய முடிவு செய்திருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த திரையுலகினரையும், ரசிகர்களையும் வருத்தத்தில் ஆழ்த்தியது.

இதனையடுத்து இவர்களது பிரிவு குறித்து பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு தகவலும் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இவர்களை பற்றி வரும் ஒவ்வொரு தகவலும் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றது. அதேசமயம் இருவரையும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்ப உறுப்பினர்களும் கடந்த ஒரு மாதமாகவே தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும், ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் ஐஸ்வர்யா மீண்டும் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்த போதும், நடிகர் தனுஷ் தனது முடிவில் உறுதியாக இருப்பதால் இருவரும் சேர்ந்து வாழ்வது கடினம் என தகவல் வெளியானது. அதற்கு பிறகு நமக்குன்னு இருப்பது நமக்கு கிடைக்கும் என்று ஐஸ்வர்யாவும் தனது பெயருக்கு பின்னால் இருந்த தனுஷ் பெயரை நீக்கி விட்டு ரஜினிகாந்தின் பெயரை சேர்த்துள்ளார். இதன்மூலம் ஐஸ்வர்யா இனி அவர் அப்பாவுடன்தான் இருக்கப் போகிறார் என்று தகவல் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் குறித்து தனது நண்பர்களிடம் பேசியது குறித்த தகவல் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நடிகர் தனுஷ் தனது மருமகன் அல்ல, அவர் தனது மூத்த மகன் என்று ரஜினிகாந்த் கூறியதை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்துக்கு அவரது மகள் ஐஸ்வர்யா திருமணத்தில் பெரிய விருப்பம் இல்லாதபோதிலும், மகளின் விருப்பத்திற்காக திருமணம் செய்து வைத்தார். இருப்பினும் எந்த ஒரு இடத்திலும் நடிகர் ரஜினிகாந்த் தனுஷை விட்டுக்கொடுத்ததே இல்லை. அவரை தனது மூத்த மகனாக தான் நடிகர் ரஜினிகாந்த் நடத்தினார் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading