Sports

தன்னை விட 28 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த 66 வயது கிரிக்கெட் வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அருண் லால், தன்னை விட 28 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ள அருண் லால்(66), அவரது தோழி புல் புல் சஹா (38) இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த மாதம் 24ஆம் திகதி இருவருக்கும் திருமண சடங்குகள் தொடங்கின.

இந்த நிலையில் நேற்றைய தினம் இருவரும் கொல்கத்தாவில் பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். அப்போது தங்கள் திருமணத்தை கேக் வெட்டி கொண்டாடினர்.

இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது. அருண் லால் தனது முதல் மனைவியான ரீனாவை விவாகரத்து செய்த போதிலும், அவரது உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தன்னுடனே வைத்துக் கொண்டு கவனித்து வருகிறார். மேலும் அவரது சம்மதத்தின் பெயரிலேயே இரண்டாவது திருமணம் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading