Local

தமக்கு நெருக்கமான ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?

தமக்கு நெருக்கமான ஒருவர் கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டால் ஏனையவர்கள் என்ன செய்ய வேண்டும் என, ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, தொற்று பிரிவின் பிரதானி வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

யாராவது அருகிலுள்ளவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டால், அவர் அடையாளம் காணப்பட்டு 3 முதல் 5 நாட்களுக்குள், அவருடன் பழகிய நெருக்கமான நபர்கள் கொவிட் பரிசோதனைகளை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவின் தொற்று நோய் தடுப்பு பிரிவின் சுகாதார வழிகாட்டியில் இந்த விடயம் கூறப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

5 முதல் 7 நாட்களுக்கு இந்த பரிசோதனையை செய்ய வேண்டும் என இதற்கு முன்னர் கூறப்பட்டிருந்தது.

கோவிட் நோய் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், அன்டிஜன் பரிசோதனையை செய்வது சிறந்தது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். எனினும், நோய் அறிகுறிகள் தென்படாத பட்சத்தில், PCR பரிசோதனை செய்வதே சிறந்தது என வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading