World

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியது!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கடந்த ஒன்றாம் தேதி முதல் ஒவ்வொரு நாளும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்புக்கு ஆளாகின்றனர்.
இன்று (17.06.2020) இதுவரை ஒரே நாளில் 2174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50,193 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், இன்று ஒரே நாளில் 48 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் மட்டும் 1276 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்கள் 35,556 பேர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களில் இதுவரை 27,624 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று குணமடைந்தவர்கள் 842 பேர்.

அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,43,091-லிருந்து 3,54,065-ஆக உயர்ந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9,900-லிருந்து 11,903-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,80,013-லிருந்து 1,86,935-ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் 24 மணி நேரத்தில் 2,003 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், 24 மணி நேரத்தில் 10,974 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading