Local

தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கும் நியூஸிலாந்து!

உலகின் கோடிக்கணக்கான மக்கள் விரும்பி படிக்கும் மொழியாக இன்று தமிழ் வளர்ந்து வருகிறது.சீனர்கள்கூட மிக வேகமாக தமிழை கற்று வருகின்ற அதேநேரம் இலங்கையில் மட்டும் அவ்வப்போது தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், ‘இன்பத்தமிழ் இனி மெல்லச்சாகும்’என்பதை பொய்யாக்கும் விதத்தில் நியூஸிலாந்து அரசாங்கம் தற்போது தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் வழங்கி தமிழை இன்னுமொரு பரிமானத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

நியூஸிலாந்தின் முதல்தர பத்திரிகையான ‘அரசன்’ நியூஸிலாந்து பல்சுவை இதழின் ஊடகப்பிரிவினர் பிரதமரின் அமைச்சரவை அலுவலகத்திற்கு (DPMC) விடுத்த வேண்டுகோளை ஏற்று நியூஸிலாந்து அந்நாட்டில் தமிழ்மூலமான செயலிகளை ஆரம்பித்துள்ளது.

அந்த வகையில் தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு ‘கொவிட்19’ தகவல்களை தமிழில் மக்களுக்கு வழங்க https://covid19.govt.nz/iwi-and-communities/translations/tamil/ எனும் இணையத்தள சேவையை நியூஸிலாந்து அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

நியூஸிலாந்தில் வாழும் தமிழ்பேசும் மக்கள் இதன் மூலமாக நன்மை அடைந்து வருவதோடு, தமிழ் ஆர்வலர்கள் பலர் நியூஸிலாந்து அரசாங்கத்தை பாராட்டியும் வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading