Local

தலைமன்னாரில் ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை..!!

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னாரில் இருந்து வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் பாலத்துடன் தொடர்புடைய மணல் திட்டுகளைப் பார்வையிடுவதற்கான விசேட படகு சேவைகள் வரும் ஒக்டோபர் 15 ஆம் திகதி முதல் தொடங்கப்படவுள்ளன.

இதற்கான முதற்கட்ட சோதனை ஓட்ட நடவடிக்கைகள் தற்போது வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மன்னார் மாவட்டச் செயலகத்தில், அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் தலைமையில் நேற்று (ஒக்டோபர் 1) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் துறை சார்ந்த திணைக்களத் தலைவர்கள், தலைமன்னார் பங்குத்தந்தை மற்றும் உள்ளூர் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை - வெளியான அறிவிப்பு | Good News Ferry Service Between Ram Setu Bridgen

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டல்கள் ஒரு படகில் அதிகபட்சமாக 7 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுவர்.

வனஜீவராசிகள் திணைக்களக் கட்டணமாக ஒரு பயணிக்கு ரூ. 140 அறவிடப்படும். படகு சேவைக்காக 7 பயணிகள் கொண்ட ஒரு படகிற்கு மொத்தம் ரூ. 17,500 (நபர் ஒருவருக்கு ரூ. 2,500) கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்டுள்ள இக்கட்டணத்தின் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் அமைந்துள்ள 5 மணல் தீவுகள் வரை சென்று பார்வையிட முடியும்.

பயணிகள் முதலாவது மணல் தீவில் இறங்கி நீச்சல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ராமர் பாலம் அருகே சுற்றுலா படகுச் சேவை - வெளியான அறிவிப்பு | Good News Ferry Service Between Ram Setu Bridgen

இதற்கான மேலதிக கட்டண விபரங்கள் சுற்றுலா மேலாண்மைக் குழுவால் விரைவில் வெளியிடப்படும்.

மேலும், மூன்றாவது மணல் தீவில் பயணிகள் குறிப்பிட்ட நேரம் தங்கியிருந்து பார்வையிடவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வரும் 15 ஆம் திகதி முதல் தொடங்கவுள்ள இப் படகு சேவையைப் பயன்படுத்த விரும்பும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், சுற்றுலா மேலாண்மைக் குழுவைத் தொடர்புகொண்டு முன்பதிவுகளை மேற்காள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading