Sports

தல தோனி வீட்டில் விரைவில் குட்டி தோனி!

டோனியின் மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

சென்னை அணி கேப்டன் டோனியின் மிரட்டலான தலைமை இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என கூறினால் அது மிகையாகாது. நேற்று இறுதிப்போட்டி முடிந்த பின்னர் டோனியின் மனைவி சாக்‌ஷி, மகள் ஜிவா ஆகியோர் மைதானத்தில் டோனியை கட்டிபிடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த நிலையில் டோனி மனைவி சாக்‌ஷி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலை சுரேஷ் ரெய்னாவின் மனைவி பிரியங்கா உறுதி செய்திருக்கிறார். இதையடுத்து ஜிவாவுக்கு விரைவில் சகோதரியோ, சகோதரனோ பிறக்கவுள்ளார் என ரசிகர்கள் சமூகவலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading