World

தவணை முறையில் விமான பயணக்கட்டணம் செலுத்தும் முறை அறிமுகம்!

விமான பயணச்சீட்டுக்கான கட்டணத்தை தவணை முறையில் செலுத்தும் திட்டத்தை ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

பொதுவாக சாமனியர்கள் பலருக்கும் விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கான போதிய பணம் ஒரே நேரத்தில் அனைவருக்கும் கிடைப்பதில்லை. 

இதனை பூர்த்தி செய்யவும், சாமானியர்கள் விமானத்தில் பயணம் செய்யவும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமானங்களைப் பயன்படுத்தும் போது 3,6 மற்றும் 12 மாதத்தவணைகளாக விமான பயணத்துக்கான கட்டணத்தை செலுத்தும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

மேலும் இந்த தவணை திட்டத்தில் 3 மாதத் தவணையில் செலுத்துவோருக்கு வட்டியும் இல்லை என்றும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading