World

தான் வெளியேற்றும் “வாயுவை” விற்று இலட்சம் டொலர் சம்பாதித்த பெண்!

இந்த டிஜிட்டல் உலகில் ஏதுவும் சாத்தியமே என்பது நாம் அறிந்ததே, ஆனால் இதையெல்லாமா? ஆன்லைன் மூலம் விற்று பணம் சேர்க்கமுடியும் என்று நாம் ஆச்சர்யப்படும் அளவிற்கு ஒரு அமெரிக்கா பெண் நம்மை “மூக்கை மூட” வைத்துள்ளார். என்னது மூக்கை மூட வைத்துள்ளாரா? ஆமாங்க ஆமா, அமெரிக்க பெண் ஒருவர் கண்ணாடி குடுவைகளில் தனது Farts-ஐ அடைத்து விற்று லட்சம் அமெரிக்க டாலர் சம்பாரித்துள்ளார். ஆமாம் நீங்கள் இப்பொது படித்தது நிஜம்தான், அந்த பெண் தான் வெளியிடும் வாயுவை கண்ணாடி குடுவையில் அடைத்து விற்று பணம் பெற்றுள்ளார்.

இதையும் படியுங்கள் : ஓய்வின்றி உழைத்த தொழிலாளி ரூபி – மெய்யானது அவருடைய கனவு

கடந்த டிசம்பர் 15ம் திகதி அன்று வெளியிடப்பட்ட யூடியூப் வீடியோவில், Fart ஜாடிகளை விற்பதன் மூலம் சுமார் 1,00,000 அமெரிக்க டொலர்கள்  சம்பாதித்ததாக வெளிப்படுத்தினார் அமெரிக்காவை சேர்ந்த Stephanie Matto. அவர் வெளியேற்றும் வாயு உள்பட அந்த ஜாரில் ஒரு பூவின் இதழ் மற்றும் அவர்கள் தனது கைப்பட எழுதிய ஒரு வாழ்த்து சீட்டும் வைக்கப்படுகிறது.

ஒரு ஜாடியை வாங்க 1,000 அமெரிக்க டொலர்கள் செலவாகும் என்றும், ஆனால் தற்போது 500 அமெரிக்க டாலர்கள் என்ற Offerல் தரப்படுவதாக அவர் தெரிவித்தார். இதுவரை 175 ஜாடிகளை விற்றுள்ளதாகவும் அவர் கூறினார். Matto-வின் இந்த தனித்துவமான தயாரிப்புகள் Unfiltrd என்ற தளத்தில் விற்கப்படுகின்றன, இது ஒரு கிரியேட்டர் தளமாகும். “People” என்ற இணையதளம் அளித்த கூற்றுப்படி, Fart ஜாடிகள் ஒரு Limited Edition தயாரிப்பு வெளியீட்டாகத் தொடங்கியது என்றும், ஆனால் அது அவரது மிகவும் இலாபகரமான முயற்சிகளில் ஒன்றாக பிறகு மாறியது என்றும் கூறியுள்ளது.

Matto தனது Unfiltrd பக்கத்தில் “20 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள்” கோரிக்கை விடுததால் தான் Fart ஜாடிகளை விற்க ஆரம்பித்ததாக கூறினார். டிசம்பர் 15 வெளியான அந்த வீடியோவில், அவர் சிறந்த Fart ஜாடிகளை நிரப்ப என்ன உணவை உட்கொள்கிறார் என்பதையும் பகிர்ந்துள்ளார். கருப்பு பீன் சாலட், கோகோ கோலா, Brussels sprouts மற்றும் protein muffinsகளை அவர் சாப்பிடுவதாக அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading