Local

தாமரை கோபுரம் எதிர்வரும் 15ஆம் திகதி திறப்பு கட்டணம் அறிவிப்பு!

செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் தாமரை கோபுரத்தின் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பமாகும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, 500 ரூபா அனுமதிச் சீட்டின் ஊடாக ஒரு தடவை தாமரை கோபுரத்தின் உச்சத்திற்கு பயணித்து வர முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, 2000 ரூபா அனுமதிச் சீட்டின் ஊடாக வரிசையில் காத்திருக்காமல் உட்பிரவேசித்து எத்தனை முறைகளானாலும் தாமரை கோபுரத்தின் உச்சிக்கு சென்றுவர முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தாமரை கோபுரத்திற்குள் பிரவேசிப்பதற்காக 20 அமெரிக்க டொலர் அறிவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading