World

தாயின் திருமணத்திற்கு தாலி எடுத்து கொடுத்த 9 வயது மகன்!

தமிழகத்தில் தாயின் திருமணத்திற்கு மகன் தாலி எடுத்து கொடுத்த புகைப்படம் இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியைச் சேர்ந்தவர் சுபாஷினி ராஜேந்திரன். இவர் அங்கிருக்கும் கல்லூரி ஒன்றில் ஆங்கில ஆசியராக வேலை செய்து வருகிறார். இவர் தன்னுடைய முதல் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு பிரிந்து தன்னுடைய 9 வயது மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் சுபாஷினிக்கும், திரைத்துறையில் ஓவியராக பணிபுரிந்து வரும், மதுரை திருமங்கலத்தை சேர்ந்த ஆதிஸ் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அதன் படி இவர்களின் திருமணம், மதுரை திருமங்கலத்தில் இருக்கும் பெருமாள் கோவில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெற்ற இவர்களின் திருமணத்தின் போத், சுபாஷினியின் 9 வயது மகன் தாலி எடுத்து கொடுக்க, ஆதிஸ், தாலி காட்டினார். இதைக் கண்ட அங்கிருந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

மகன் தாலி எடுத்துக் கொடுத்ததைக் கண்ட தாய் சுபாஷினி ஒரு நிமிடம் கண்கலங்கிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறினர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading