Features

தாய்ப்பாலில் நச்சுத்தன்மை ஆராய்ச்சியில் அதிர்ச்சி தகவல்!

தாயின் பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதாக இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு அஞ்சுகிறது.
தாயின் பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளை ஆய்வு செய்தபோது இத்தாலிய ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 34 தாய்மார்களும் ஒரு வாரத்திற்கு முன் குழந்தை பெற்ற தாய்மார்கள் என்றும் இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் விளக்கமளிக்கின்றனர்.
உயிரினங்களின் உடலில் பிளாஸ்டிக் விஷம் இருப்பது ஒரு பயங்கரமான சூழ்நிலை. அவை செல்களை பாதிக்கின்றன. புற்றுநோயை உண்டாக்கும்.
தாயின் பாலில் பிளாஸ்டிக் விஷம் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என்பதைச் சொல்லத் தேவையில்லை” என ஆய்வில் ஈடுபட்டுள்ள இத்தாலிய விஞ்ஞானிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மைக்ரோ-பிளாஸ்டிக் என்பது 5 மிமீக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள்.
தாயின் பாலில் நுண்ணிய பிளாஸ்டிக்குகள் இருப்பதை உறுதிசெய்துள்ளதன் மூலம், மனித உடலிலும் பிளாஸ்டிக் நச்சுகள் இருப்பதைக் காட்டுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading